Get More information About Lastest Tips & Tricks Subscribe Youtube Channel!

தென்னை சாகுபடியில் மூடாக்கு தொழில்நுட்பங்கள் (Thennai Sagupadi) - Organic Farming | Agriculture Tips in Tamil

தென்னை மரம்,தென்னை விவசாய தொழில்நுட்பம்,மூடாக்கு,தென்னை,இயற்கை முறையில் தென்னை சாகுபடி,மூடாக்கு தொழில,தென்னை சாகுபடி,மூடாக்கு போடுதல் அப்படின்னா என்ன,
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

தென்னை சாகுபடியில் மூடாக்கு தொழில்நுட்பங்கள் (Thennai Sagupadi) - Organic Farming | Agriculture Tips in Tamil


 உலகிலேயே தென்னை மரம் மிகவும் பயனளிக்கக் கூடிய ஒரு மரமாகும். மேலும், பெரும்பாலான விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கக்கூடிய மரமாகவும் விளங்குகிற இம்மரத்தின் அனைத்து பாகங்களும் மனித வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வகையில் பயனளிக்கக் கூடியதாக உள்ளது. அதனால், தென்னை மரம் "கல்பவிருக்ஷா" (சொர்க்கத்தின் மரம்) என்றுஅழைக்கப்படுகிறது. மேலும், ஆசிய நாடுகளின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து காணப்படுகிறது. தற்போதுஎல்லா நாடுகளிலும் தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகஅளவில் இந்தோனேசியாவில் 32.10 சதவிகிதமும், பிலிப்பைன்ஸிநாட்டில் 26.60 சதவிகிதமும், இந்தியாவில15.90 சதவிகிதமும் ஸ்ரீலங்காவில் 3.50 சதவிகிதமும் மீதமுள் உலக நாடுகளில் 21.90 சதவிகித பரப்பிலும் தென்னை பயிரிடப்பட்டு வருகின்றது. தமிழகத்தில்குறிப்பாக கடந்த 40 ஆண்டுகளாகபல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் பயனாக தரமான தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. மேலும்1958 ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டது. இந்தஆராய்ச்சி நிலையம் இரக மேம்பாடு மற்றும் அதன் முக்கிய ஆராய்ச்சிப் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வீரியஒட்டு இரகங்களை மூலம் விளைச்சல் நடவு செய்ததின் அதிகரித்துள்ளது. அதனால்தமிழகம் இன்று விளைச்சலில் முதலிடத்தில் உள்ளது.

வாய்க்கால் மூலம் நீர்அளிக்கப்படும் போது 30 - 40 சதவிகிதம் அதிகப்படியான அளவு நீரினை அளிக்க வேண்டும் (135 165 லிட்டர் / நாற்றங்கால்).

மண் மற்றும் ஈரப்பதம் பாதுகாத்தல்

தென்னை ஆண்டு முழுவதும் காய்க்கும் திறன் கொண்டது. ஆகையால்தென்னைக்கு ஆண்டு முழுவதும் நீர் தேவையிருக்கும். எனவேமண்ணில் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல் மிகவும் முக்கியமாகும். மண்ணின்ஈரப்பதத்தினைப் பொறுத்தே சத்து எடுக்கும் திறன் மற்றும் வளர்ச்சி இருக்கும். வறட்சிகாலங்களில் தென்னை வளர்ச் சிக் குறைவாக காணப்படும். மேலும், காய்கள் உதிர்வும் குரும்பை உதிர்வும் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் தென்னந் தோப்பில் மண்ணை கிளறிவிடாமல் விட்டு விடுதல் வேண்டும். மழைக்காலத்தில் மண் அரிமானம் நிகழும் ஆகையால், சமமானநில அமைப்புகளில் ஆங்காங்கே சிறு சிறு குழிகளை அமைக்க வேண்டும். நிலஅமைப்பு சரிவாக காணப்படும் இடங்களில் சரிவுக்கு குறுக்காக பாத்திகள் அல்லது குழிகளை அமைக்க வேண்டும். இவைஅனைத்தும் மழை நீர் வீணாக காரமடை வட்டத்தின் தாயனூர் என்ற கிராமத்தில் திரு. கணேசன்என்பவருது பண்ணையில் மாதிரி செயல்விளக்கத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதில்தென்னையில் நீர் மேலாண்மை, சத்துமேலாண்மை மற்றும் விளைச்சலை அதிகப்படுத்தும் தொழில்நுட்பங்களை செயல் விளக்கங்களாக அளிக்கப்பட்டு வருகிறது மண் மற்றும் நீர் மேலாண்மைக்கான வழிமுறையான மூடாக்கு பற்றி இங்கு காண்போம்.

மூடாக்கு

நிலமூடாக்கு அமைப்பதால் நீர் ஆவியாவது குறைந்து மண்ணில் நீர் சேமிப்புத் திறன் அதிகமாகும். வடகிழக்குபருவ மழைக்கு முன் தென்னை மரத்தினை சுற்றி பச்சை அல்லது காய்ந்த இலை சருகுகளை கொண்டு மூட வேண்டும். இவ்வாறுசெய்வதனால் மழை நீர் சேகரிக்கப்படுவதோடு மண் அரி மானமும் தடு க் கப் படுகிறது நிலமுடாக் கு மண் ணின் வெப்ப நிலையையும் குறைக்கிறது.

நன்மைகள்

  • மூடாக்கிடல் முறையின் மூலம் மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப் படுவதோடு விளைச்சல் அதிகரித்து தரமான விளைபொருள் கிடைக்கிறது.
  • மூடாக்கிடுதல் மூலம் அதிக வெப்பம் மற்றும் பனி போன்றவைகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
  • மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் வழிந்தோடி வீணாகாமலும், மண் அரிமானம் ஏற்படாமலும் தடுக்கிறது.
  • கோடை காலங்களில் மண்ணில் வெப்பநிலையை குறைத்தும் மழைக்காலங்களில் மண்ணில் வெப்பநிலையை அதிகரித்தும் மரங்களை பாதுகாக்கிறது
  • மூடாக்கிடுதல் செய்யப்பட்ட மரங்கள் ஒரே சீராக முதிர்ச்சி அடைகின்றன விளைச்சல் மற்றும் விளைபொருள்களின் தரம் அதிகரிக்கப்படுகிறது.
  • மூடாக்கிடுதல் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • மண்ணில் அங்ககப் பொருட்களின் அளவு அதிகரிக்கிறது.

தேங்காய் மட்டை மூடாக்கு

குறைந்த வெளியிடுப் பொருட்களை கொண்டு தென்னைக்கு தேவையான மூடாக்குகளை எளிமையாக அமைக்கலாம். இதனால்வெளியிடுப் பொருட்களின் செலவு குறைக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

தென்னை ஓலை மூடாக்கு

காய்ந்த அல்லது பசுமையான தென்னை ஓலைகளை மரம் ஒன்றிற்கு 15 என்றவீதத்தில் மரத்திலிருந்து சுமார் 1-2 மீட்டர்தூரம் நன்றாக பரப்பி மூடாக்கு அமைப்பதால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது.

தேங்காய் நார் மஞ்சு

இதனைப்போலவே தென்னை நார் மஞ்சு கொண்டும் மூடாக்கு அமைக்கலாம். தேங்காய்நார் சுமார் 10 செ.மீ உயரத்திற்கு போதுமானது அல்லது மரம் ஒன்றிற்கு 25 கிலோஎன்ற வீதத்தில் மரத்தினை சுற்றியும் மூடாக் கு அமைப்பதால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதோடு நல்ல இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.

 தென்னை மட்டை மற்றும் நார்க்கழிவுகளை மண்ணில் இடுவதால் அவை மக்கிய பிறகு மண்ணில் செல்லுலோஸ் எனும் கரிமப்பொருட்களின் அளவினை அதிகரிக்கிறது. இதனால்மண்ணின் பௌதீக குணங்கள் மேம்படுவதோடு, மண்ணின்நீர்ப்பிடிப்புத் திறன் கூடி வறட்சியை தாங்க ஏதுவாகிறது. மேலும்மண் பொல பொலப்பாவதுடன் மண்ணில் காற்றோட்டமும் அதிகமாகிறது. தென்னைநார்க்கழிவு அமிலத்தன்மை உடையது. அவற்றைஉவர்நிலங்களுக்கு இடும்போது அவற்றின் களர் உவர் தன்மையை மாற்றுகின்றது களர் அல்லாத ஏனைய நிலங்களிலும் இது நல்ல பலனைக் கொடுக்கவல்லது என் கண்டறியப்பட்டுள்ளது மண்ணில் மேலும் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமாவதால் அதன் செயல் திறன் மேம்பட்டு மண் வளத்தை காக்கிறது. களைவளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

பசுந்தாள் பயிர்கள்

தென்னை மரத்தினை சுற்றி அடர்த்தியாக பசுந்தாள் பயிர்களான சணப்பை, நரிப்பயறு, தக்கைப் பூண்டு போன்றவற்றை விதைப்பதினால் இவை நிலமூடாக்கு போல செயல்பட்டு மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாப்பதோடு, நுண்காலநிலையையும் (Micro Climate) மேம்படுத்துகிறது மேலும் பூக்கும் தருவாயில் மடக்கி விட்டு அப்படியே மக்கச் செய்வதால் தழைச்சத்தும் கிடைக்கப் பெறுகிறது, மரம்ஒன்றிற்கு 50 கிராம்என்ற வீதத்தில் மரத்தினை சுற்றி விதைத்து விடுவதால் இவை மூடாக்கு போன்று செயல்பட்டு மண் அரிமானத்தை தடுப்பதோடு மண்ணில் ஈரப்பதத்தையும் சேமிக்கிறது.

ஆராய்ச்சி முடிவு

மேற்குறிப்பிட்ட நான்கு வகையான மூடாக்குகளும் நீர் மேலாண்மை மாதிரி திடலில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறுமூடாக்கு அமைப்பதால் மண் ஈரப்பதத்தில் ஏற்படும் விளைவுகள் ஈரப்பதங்காட்டி கொண்டு சீரான இடைவெளியில் கண்காணிக்கப்பட்டது. இவ்வாறு ஆராய்ந்து பார்த்ததில் தேங்காய் மட்டைகளை கொண்டு அமைக்கப்படும் மூடாக்கு அதிகபட்சமாக 21.91 சதவிகிதம் ஈரப்பதத்தை சேமித்து வைக்கிறது ஓலையானது 16.95 சதவிகித ஈரப்பதமும் வைக்கிறது. இதற்குஅடுத்தப்படியாக தென்னை ஓலையானது 16.95 சதவிகித ஈரப்பதமும், தேங்காய்நார் மஞ்சு 15.06 சதவிகித ஈரப்பதமும் பசுந்தாள் பயிர் 6.87 சதவிகிதஈரப்பதத்தினையும் சேமித்து வைக்கிறது என்பது கண்டறியப்பட்டது இசை அனைத்தும் மூடாக்கு அற்றவையோடு ஒப்பிட்டவை ஆகும்.

இவ்வாறு மூடாக்கு அமைப்பதால் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதோடு நீர்பாய்ச்சும் இடைவெளியும் அதிகமாகிறது இதனால் நீர் குறிப்பாக வறட்சி சேகரிக்கப்படுகிறது காலங்களில் நீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் மறைமுகமாக ஏற்படும் மாற்றங்களான மண்ணின் நுண்காலநிலை, அங்ககச்சத்து நுண்ணுயிர்கள் ஆகியவையும் மேம்படுகின்றது. மேலும், மூடாக்குடன் சீரான சத்து மேலாண்மை நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமாகும்.

உரமிடும் அளவு

இந்த உர ளவினை இரண்டாக பிரித்து வருடத்திற்கு இருமுறை அதாவது ஆடி மற்றும் மார்கழி மாதத்தில் இடுவது மிகவும் ஏற்றது இவ்வாறு பிரித்து இடுவதால் பயிர்ச் சத்துக்கள் விரயமாவது வெகுவாக குறைக்கப்படுகிறது.

இவ்வாறு முறையான நீர் மேலாண்மை (சொட்டுநீர் மண் ஈரப்பத பாதுகாப்பு முறைகள் மற்றும் சத்து மேலாண்மை முறைகளை பின்பற்றியதால் தென்னையில் வரை 21.70 சதவிகிதம் விளைச்சல் அதிகரித்தது கண்டறியப்பட்டது.

Incoming Search Terms:

தென்னை மரம்,தென்னை விவசாய தொழில்நுட்பம்,மூடாக்கு,தென்னை,இயற்கை முறையில் தென்னை சாகுபடி,மூடாக்கு தொழில,தென்னை சாகுபடி,மூடாக்கு போடுதல் அப்படின்னா என்ன,தென்னை விவசாயம்,காய்கறி பயிர்களில் மூடாக்கு,தென்னை பயிருக்கு உரங்கள் கொடுக்கும் முறை,தென்னை பயிர் சாகுபடி முறை,தென்னை மரம் வளர்ப்பு,தென்னை மரம் பராமரிப்பு,தென்னை பயிருக்கு கற்பூர கரைசல் கொடுக்கும் முறை,இலைகளால் மூடாக்கு,தென்னை ஊடு பயிர்கள்,வறட்சியை சமாளிக்க உதவும் மூடாக்கு,தென்னை மரங்களுக்கு இடையே விவசாயம்

thennai maram,thennai maram valarpu,thennai sagupadi,thennai,thennai nadavu murai,thennai vivasayam,thennai maram paramaripu,thennai maram naduvathu eppadi,thennai tonic,thennai valarpu,thennai valarppu,thennai thengai,thennai maram paramarippu,thennai maram valarpu tamil,thennai pannai,thennai naduvathu eppadi?,milagu sagupadi,theenaikidaye oodu payir saagupadi,milagu sakupadi,thennai nadum murai,thennai maram valarpadhu epadi

organic farming,farming,organic,what is organic farming,organic food,integrated organic farming,how does organic farming work,organic farming in south africa,natural farming,in organic farming,why organic farming,sustainable farming,local organic farming,jadam organic farming,is organic farming good,types of organic farming,organic farming methods,how to do organic farming,what is organic,what is organic farming?,organic farming explained

agriculture,bsc agriculture in tamil,bsc agriculture jobs in tamil,agriculture machine in tamil,nammalvar agriculture in tamil,bsc agriculture course details in tamil,agriculture technology projects in tamil,agriculture technology in india tamil,how to pass agriculture officer in tamil,agriculture technology learn it in tamil,how to become agriculture officer in tamil,bsc agriculture career and salary in tamil,agriculture information technology in tamil

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.