Get More information About Lastest Tips & Tricks Subscribe Youtube Channel!

திரைப்படக்கலை உருவான கதை (History of Film) - Thiraipada Kalai in Tamil

திரைப்படக்கலை,திரைப்படக்கலை பொது தமிழ்,திரைப்படக்கலை tnpsc வினாக்கள்,கதை,திரைக்கதை,பசங்க (திரைப்படம்),சிற்பம்--ஓவியம்--திரைப்படக்கலை#tnpsc,சிற்பக்கலை,
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

  

திரைப்படக்கலை உருவான கதை | History of Film | Thiraipada Kalai in Tamil


திரைப்படத்தின் சிறப்பு

 கலைநம் வாழ்வின் உயிர் நாடி. கலையில்லையேல் வாழ்வில் சுவையிருக்கும். திரைப்படம் ஓர் அற்புதமான கலை. உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் உலகமொழி திரைப்படம். அஃது உதடுகளால் பேசும் மொழியன்று; உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி. ஆனால், மக்களைத்தன் வயப்படுத்தும் ஆற்றல் திரைப்படத்திற்குஉண்டு.

 திரைப்படத்தின் வரலாறு

 ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830 ஆம் ஆண்டு கண்டுபிடித்த பின்னர், எட்வர்டு மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றி பெற்றார். ஈஸ்ட்மன்என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தவர். எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர். பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894 இல்ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப் படத்தை பலரும் பார்க்கும்வகையில் வடிவமைத்தார். புதியபடவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.

இவ்வியக்கப்படத்தில் நாட்டியம், கடல்அலைகள் கரையில் மோதுதல் முதலிய காட்சிகளைக் காண முடிந்தது. இவற்றை ஆயிரக்கணக்கான இடங்களில் படம்காட்டிக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். இவைபேசும் படங்கள் அல்ல; ஊமைப் படங்கலே.

 திரைப்படம்

 ஊமைப்படங்களைப் பேசும் படங்கள் மாற்றுவதற்குப் பல்வேறு அறிவியல் அறிஞர்கள் அயராது உழைத்தார்கள். அதனால், திரைப்படத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியது. திரைப்படத்துக்குரிய கதையுடன் கதை மாந்தர்தேர்வு செய்யப்பட்டனர். கதை, உரையாடல், பாடல் முதலியன முதலில் ஆயத்தம் செய்யப்பட்டன. பின்னர், அவர்களுக்கு ஏற்ற உடைகள்வடிவமைக்கப்பட்டன. திரைப்பட நடிகர், நடிகையர், அவர்களுக்கு தோழர், தோழியர், பணியாளர்கள் என நடிகர் பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

நடிகரின் குரல் இசைவாக இல்லாவிடில், மற்றொருவர் குரல் தரும் முறை கொண்டுவரப்பட்டது. ஒரு மொழிப்படத்தை மற்ற மொழியில் மாற்றி அமைக்கும் முறைக்கு, மொழி மாற்றம் என்று பெயர். நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும் வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலம் உடையாரை இயக்குநர் என்பர். அவருக்கு உதவியாகத் துணை இயக்குநர் பணியாற்றுவார். படம் எடுத்தலைப் படப்பிடிப்பு என்பர். திரைப்படக்கலை இவ்வாறு காலத்திற்கேற்ப வளர்ச்சி பெற்றது.

 கதைப்படங்கள் மட்டுமன்றிக் கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விபாடல்கள் எனப் பல வளர்ச்சிநிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது. செய்திப் படங்கள், உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் படமாக்கிக் காட்டும். செய்திப்படங்கள் வாயிலாக உலக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே, காணும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. விளக்கப்படங்களால் ஒருநாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை உள்ளவாறு அறியலாம். படம் பதிவின் போது பலவகைத் தொல்லைலைகளும் அல்லல்கள் இடர்ப்பாடுகள் தடைகளும் ஏற்படும் உலகப்போரின்போது ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் படமெடுப்போர் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 திரைப்படச்சுருள்

 திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது. படம் எடுக்கப்பயன்படும் சுருள், எதிர்ச்சுருள் எனப்படும். ஒலி, ஒளிப்பதிவுகளைத் தனித்தனிப் படச்சுருள் களில்அமைப்பர்

 படம்பிடிக்கும் கருவி

 திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யப் படப்பிடிப்புக் கருவி இன்றியமையாதது. படப்பிடிப்பின்போது படப்பிடிப்புக்கருவி அசைந்தால் படம் தெளிவாகவராது. ஆகையால் உறுதியான உயரமான இடத்தில் அக்கருவியைப் பொருத்திய விடுவர். சிலர்படப் பிடிப்புக் கருவியை நகர்த்தும் வண்டியில் பொருத்துவதும் உண்டு. படப்பிடிப்புக் கருவியில் ஓடி நீளமுள்ள UL படச்சுருளில் பதினாறு படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.

ஒலிப்பதிவு

 திரைப்படத்துக்கான பாடல்களையும் உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்வர். உரையாடலில் எழும் ஒலிஅலைகள் ஒரு நுண்ணொலிபெருக்கியைத் தாக்கும். நுண்ணொலிபெருக்கி பெருக்கப்பட்டு ஒலியலைகளை மின் அதிர்வுகளாக்கும். மின் அதிர்வுகள் ஒருவகை விளக்கினுள் செலுத்தப்படுகின்றன. அம்மின்னோட்டத்திற்குத் தக்கவாறு விளக்கின் ஒளிமாறும். இவ்வொளி, படச்சுருளின் விளிம்பிலுள்ள பகுதியில் விழுந்து, அங்கு அஃது ஒலிப்பாதையைத்தோற்றுவிக்கும்.

 திரைப்படக்காட்சிப் பதிவு

 ஒளி ஒலிப்படக்கருவி என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப் பயன்படுகிறது. இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும், அடிப்பக்கம் ஒன்றுமாக வட்டமான இரு பெட்டிகள் இருக்கும். காட்ட வேண்டிய படச்சுருளை மேல் பெட்டியில் பொருத்துவர். இக்கருவியில் பல பற்சக்கரங்களும், சக்கரங்களும் உண்டு. படச்சுருளைப் பற்சக்கரங்களுக்கு இடையில் செலுத்திக் கீழே உள்ள பெட்டியில் மீண்டும் சுற்றிக் கொள்ளுமாறு செய்வர்.

இவ்வாறு படச்சுருள் பிரிந்து மீண்டும் சுருட்டிக்கொள்ளும். இடையில் ஒளிமிகு விளக்குகளுக்கும், உருப்பெருக்கிகளுக்கும் இடையில் படம் வரும். முன்புறம் ஒரு மூடி இருக்கும். மூடிக்கு இரண்டுகைகள் உண்டு. அந்த மூடி நொடிக்கு எட்டுமுறை சுழலும். அதன்கைகள் நொடிக்குப் பதினாறு முறைசுழலும். அதனால், அதன் கைகள் ஒளியை மறைக்கும். ஒளி இருக்கும் போதெல்லாம் படச்சுருள் நழுவி, அடுத்தபடம் வந்துநிற்கும். அதற்குள் மூடிதிறந்துவிடுவதால் அப்படம் திரையில் விழும். திரைப்பட இயந்திரங்களில் நவீன தொழில்நுட்பங்களைக் கையாளுவதனால், திரைத்துறை வளர்ச்சியும் செழுமையும் பெற்றுத் திகழ்கிறது. பல காலங்களில் பல்லோரது உழைப்பினாலும், புதியன காணும் விருப்பத்தினாலும் மேன்மை பெற்றுத் திகழ்கிறது இன்றைய திரைத்துறை.

 கருத்துப்படம்

 கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் 'வால்ட்டிஸ்னி என்பவர் ஆவார். அவர் ஓவியர், ஒரே செயலைக் குறிக்கும் பல்லாயிரக்கணக்கான படங்களை வரைவேன். ஒன்றுக்கொன்று சிறிது சிறிதாக மாறுவனவாக இருக்கும். இப்படங்களை வரிசைப்படி அடுக்கி வைத்துவிட்டு மிக வேகமாக ஏடுகளைப் புரட்டினால், அவை வெவ்வேறு படங்களாகத் தோன்றாமல் ஒரே நிகழ்வாகத் தோன்றும்.

 ஒவ்வொரு காட்சியிலும் வரும் விவரங்களையும், பின்னணியையும் தனித்தனியாக எழுதி, ஒளிபுகும் செல்லுலாய்டுதகட்டில் தீட்டி, திரைப்படப் படப்பிடிப்புக் கருவியை கொண்டு, இப்படங்களைப் படமாக்குவர். கதைக்கேற்ப ஒலிப்பதிவையும் செய்வர். படங்களை எழுதுவதற்குப் பதிலாகப் பொம்மைகளைக் கொண்டும் படங்களைத் தயாரிக்கின்றனர். இந்த இயங்குரு படங்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பும்.

 செய்திப்படம்

 உலகில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்கிக் காட்டுவது செய்திப்படமாகும். திரைப்படம் எடுப்பதனைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும்.

 விளக்கப்படம்

ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப்பற்றிய முழுவிளக்கத்தினையும் தருவது விளக்கப்படம் ஆகும். எடுத்துக்காட்டாக, உலகத்தமிழ் மாநாட்டு நிகழ்வை மட்டும் காட்டும் படம் விளக்கப்படம் எனப்படும்.

 கல்விப்படம்

 கல்வி கற்பிப்பதற்கென உருவாக்கப்படும் படங்கள் கல்விப்படங்கள். பல்வகை விலங்குகளின் வாழ்க்கை, பன்னாட்டு மக்களின் வாழ்க்கை முதலியவற்றைப் படம் பிடித்துக்காட்டினால், அதனைக் காணும் மாணவர் கல்விஅறிவு எளிதில் பெறுவர். வாழ்க்கையில்  நேரில் காண முடியாத பல இடங்களையும் நேரில் பார்ப்பதனைப் போல வேகாட்டுவதற்குக் கல்விப்படம் வழி செய்கிறது.

 மக்களைத் தன்பால் ஈர்த்துக்கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது திரை உலகம். கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே" எனும் வரிகள் திரைப்படத்திற்கும் பொருந்தும். மக்களிடம் மிக எளிதில் சென்று சேரும் ஆற்றல் திரைப்பட ஊடகங்களுக்கு உண்டு. அதனால், இத்துறை மக்களிடம் பேரும் புகழும் பெற்றுத் திகழ்கிறது.

Incoming Search Terms:

திரைப்படக்கலை,திரைப்படக்கலை பொது தமிழ்,திரைப்படக்கலை tnpsc வினாக்கள்,கதை,திரைக்கதை,பசங்க (திரைப்படம்),சிற்பம்--ஓவியம்--திரைப்படக்கலை#tnpsc,சிற்பக்கலை,கிரேக்கப் புராணம்,ஓவியக்கலை,கலைகள்-சிற்பக்கலை,செய்தி உருவாகும் வரலாறு கட்டுரை,செய்தி உருவாகும் விதம்,செய்தி உருவாகும் வரலாறு,திருவிளையாடல்,திரைப்படக்கலை tamil tnpsc original previous year questions paper tamil pdf download,பேச்சுக்கலை பொதுத்தமிழ்,திராவிடப்பண்ணை,திருச்சி. திரும்பிப்பார்,வசனகார்த்தக்கல்

history of cinema,history,history of film,film history,history of movies,the history of cinema,cinémathèque - a history of cinema,the history of film,history of art,history of film making,history of filmmaking,a brief history of film,history film,cinema history,history of movie,history of paint,history of horror,story of movie,films,history of the world,history of the camera,history of world cinema,history of horror genre

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.